மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவுப்படி, வருகின்ற 22.02.2019 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. விருப்பமுள்ள மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் நாளை காலை 10 மணி முதல் 1.30 மணி வரை விண்ணப்பங்களை மதுரை தல்லாகுளம், கோகலே ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
ஊர்க்காவல் படையில் சேர்வதற்கான கல்வி தகுதி – S.S.L.C.,(தேர்ச்சி) வயது – 20 முதல் 40 வரை, உயரம் –165 செ.மீ.(ஆண்கள்) / 155 செ.மீ(பெண்கள்). தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் தங்களின் முகவரியிட்ட அஞ்சல் அட்டை இரண்டு, பாஸ்போர்ட் சைஸ்போட்டோ இரண்டு, ரேசன் அட்டை அசல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் அசல் மற்றும் நகல்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.