ஹமீதியா பள்ளி மாணவர்களுக்கு சுற்றுப்புற சூழல் தொடர்பான பயிற்சி..

இன்று (20-02-2018) கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி பசுமை படை மாணவர்கள் இராமநாதபுரம் இராஜா தினகர் ஆர். சி.உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு ( EIDC) மையத்திற்கு ஹமீதியா பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தக்கலை பீர்முகம்மது தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான பயிற்சியில் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை ஆ.பெர்னாடிட் மற்றும் புவி வெப்பமயமாதல் அதன் தீர்வு பற்றிய நிகழ்வினை ஆசிரியர் ஆ.அந்தோணிதாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு POWER POINT மூலம் விளக்கம் கொடுத்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..