கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை பற்றிய சிறப்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அதே போல் இன்னும் சில வருடங்கள் இதே நிலை தொடர்ந்தால் தண்ணீர் இல்லா ஊராக மாறும் அபாயம் உள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் கீழக்கரை நகராட்சியோ இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கூட சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கையே கையாள்கிறது.
கீழக்கரை வடக்குத் தெரு பகுதி மற்றும் 3வது வார்டு பெத்ரி பகுதியில் (இப்பகுதியில் போல் கீழக்கரையில் பல இடங்களில் குடி நீர் வீணாகிக் கொண்டுதான் இருக்கிது) கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் குழாயில் நீர் வடிந்து அத் தெரு முழுவதும் ஒடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக நகராட்சி அலுவலர்களிடம் பல முறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மக்கள் நலனில் அக்கறை இல்லா ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இருக்கும வரை நாடு உருப்படாது.
1 comment
[…] தண்ணீர் தட்டுப்பாடு ஒரு புறம்.. குடி ந… […]
Comments are closed.