அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராயர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆனந்த் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் உலக வெப்பமயமாதல் என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு காரணியாக இருக்கிறது. மக்கள்தொகை பெருக்கம், தொழிற்சாலைகளின் பெருக்கம், வாகனங்களின் பெருக்கம் மற்றும் அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றின் காரணமாக நமது வளிமண்டலத்தில் காற்று மாசுக்களில் அளவு படிப்படியாக அதிகரித்தவண்ணம் உள்ளது. இது போன்ற தொடர்ச்சியான காற்று மாசுக்களின் அளவு அதிகரிப்பதால் பருவநிலை மாறிமாறி ஏற்படுவதோடுää நமது புவியும் வெப்பமடைகிறது. மேலும் புவி வெப்பமடைவதால் மழையின் அளவு குறைவதோடு நமது இயற்கை வளமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே மாணவ, மாணவியர் மரம் நடுதல், மழைநீர் சேமித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மண்வளம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் உலக வெப்பமயமாதலை படிப்படியாக குறைக்க முடியும் என எடுத்துக் கூறினார்.

மேலும் கல்லூரி NCC மற்றும் YRC மாணவர்கள் பங்கேற்ற பசுமைப்புரட்சி மற்றும் புகைப்பழக்கம் மற்றும் அதனுடைய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நாடகமும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சு. சாந்தகுமார் மற்றும் கணிதவியல் ஆசிரியர் தஇசக்கி துறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப், செயலர் ஷர்மிளா, இயக்குநர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..