இரண்டு முறை ரத்தான சேக்கிப்பட்டி கிராம சபை கூட்டம் – வீடியோ..

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டி ஊராட்சியில் இன்று(17/10/2018) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் ஒரு சில அரசுத் துறை அதிகாரிகளை தவிர மற்ற அரசு அதிகாரிகள் பங்கேற்காததாலும் மக்களுக்கு முறையாக அறிவிப்பு செய்யப்படாததாலும் இன்று 17/10/2018 காலை 11:00 மணிக்கு கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர் தலைமையில் துவங்கிய கூட்டம் மாலை 05:00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர்  மாலை 05:30க்கு துவங்கிய கூட்டத்தில் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி (கி.ஊ)அலுவலர் ராஜா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வேலவன் மற்றும் சேக்கிபட்டி ஊராட்சி செயலர் வடிவேல் உட்பட சில அரசு அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில் நூறுக்கும் மேற்ப்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

வரும் ஐந்து ஆண்டுகளுக்காக திட்டமிடும் இந்த கூட்டத்தில் பல துறை அரசு அதிகாரிகள் பங்கேற்கதாலும் பொதுமக்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை வந்திருந்த அரசு அதிகாரிகளால் வழங்க முடியாததாலும் அந்த கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்ப்பட்டது. சலசலப்பு காரணமாக சேக்கிபட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. சேக்கிபட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இது இரண்டாவது முறை.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .