Home செய்திகள்உலக செய்திகள் சாம்பவர் வடகரையில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி..

சாம்பவர் வடகரையில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி..

by Abubakker Sithik

சாம்பவர் வடகரை பகுதியில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்.சி.வி.ராமன் எனும் இந்திய அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே பரப்புவது, அறிவியல் செயல்பாடுகள், கண்டு பிடிப்புகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவது, புதிய தொழில் நுட்பங்களைச் செயல்படுத்த வைப்பது போன்றவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியில் அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற முகமூடிகளை மாணவ மாணவியர்கள் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பள்ளியில் துவங்கிய அறிவியல் தின பேரணி மதுரவாணி அம்மன் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. அறிவியல் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியை பா.பிரபாவதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் வைத்திய நாதன் வாழ்த்துரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் ராஜேஷ், சரவணன், பரமசிவன், இடைநிலை ஆசிரியர் ராஜரத்தினம், முதுகலை ஆசிரியர் ராமையா, ரூஸ்வெல்ட் சமூக அறிவியல் ஆசிரியர்கள் நடராஜன், அனிதா, சத்யா, சண்முகஜெயம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com