மேலப்பாளையம் 50வது வார்டில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 50வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர், சித்திக் நகர், பாத்திமா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய அங்கன் வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா 28.02.2024 அன்று பூங்கா நகரில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர். ராஜூ மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா, இக்லாம் பாசிலா, திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல், மற்றும் திமுக நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன் மாவட்ட துணை செயலாளர் அ.காஜா மற்றும் மாவட்ட, மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.