Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி..

இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி..

by ஆசிரியர்

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இராமநாதபுரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட  ஆட்சித் தலைவர் நேரடியாகச் சென்று திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கபப் டும் அடிப்படை சான்றுகளின் நிலுவை விபரங்கள் குறித்தும்,  நில ஆவணங்களில் கணினி திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக  வரப்பெற்ற மனுக்கள் மீது  மேற்கொள்ளபப்பட்ட  நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அதனைத்தொடாந்து  இராமநாதபுரம்வடட்ம்  பட்டணம்காத்தான் குவுக்காரத்  தெருவைச்சேர்ந்த முருகபாண்டி என்ற முகம்மது பாருக் என்பவர்  29.09.2016அன்று இராமநாதபுரம் ஜனார்தனன் மாளிகை அருகே  ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததை அடுத்து அவருடைய மனைவி  பரக்கத்நிஷா என்பவருக்கும், அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர்  தெற்குதரவை விலக்குரோட்டில் 20.01.2017அனறு  ஏற்பட்ட  விபத்தில் இறந்ததையடுத்து அவரது மனைவி லதாவுக்கும் நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் மற்றும் 2லட்சதிற்கான காசோலை வழங்கப்பட்டது.

அதேபோல இராமநாதபுரம் வட்டம் உச்சிப்புளியில் உளள் என்மணங்கொண்டான் பகுதியைச் சார்ந்த மலைமேகு என்பவர் தனது 5 வயது மகன் செல்வன் முகேஷ்பாண்டிக்கு இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவு நோய் இருப்பதாகவும்,  அதற்கான சிகிச்சைக்கு  நிதியுதவி வழங்கி உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அன்னாருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50.000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின் போது இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.சுமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து,  இராமநாதபுரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!