ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி உரையை வாசிப்பதை புறக்கணித்தார் ஆர்.என்.ரவி..

ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி உரையை வாசிப்பதை புறக்கணித்தார் ஆர்.என்.ரவி.. “தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் அதை இசைக்க வேண்டும் என நான் பலமுறை விடுத்த கோரிக்கையும் அறிவுரையும் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஆளுநர் உரையில் உள்ள பல பத்திகளில் தார்மீக அடிப்படையில் எனக்கு உடன்படவில்லை. இந்த உரையை நான் வாசிப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து. எனவே, இந்த பேரவையை பொறுத்தவரை, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.. இந்த பேரவையில் மக்கள் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வாழ்த்துகிறேன்” -தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பேச்சு.

கடந்த முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது குறிப்பிடத்தக்கது..