இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-8

(கி.பி 750-1258)

மன்னர் அல்-மஃமூன் அப்பாஸிய பேரரசின் தலைநகரான பாக்தாத் போகாமல் மெர்வ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தார்.

பதிலு இப்னு சஹல் என்ற மஃமூனின் தலைமை அமைச்சர் பாக்தாத் நகரிலிருந்து பேரரசின் மேற்கு பகுதிகளை ஆட்சி செய்தார்.

மன்னர் மஃமூன் அவர்கள் மெர்வ் நகரிலிருந்து பேரரசின் கிழக்குப்பகுதிகளை ஆட்சி செய்தார்.

பேரரசர் மஃமூன் பாக்தாத் நகருக்கு செல்லாததற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.

அப்போது பாக்தாத் நகரம் செழிப்பில்லாமல் களையிழந்து கிடந்தது.

அவரது சகோதரர் அமீன் மீது பாக்தாத் மக்கள் மிகுந்த நேசம் வைத்து இருந்தனர்.

தங்கள் பாதுஷா ஹாரூன் அர்ரஷீத் அவர்களின் மூத்த மகனும்,பட்டத்து இளவரசராகவும் அமீன் அவர்கள் இருந்ததால் மக்கள் அவரை நேசித்தனர்.

பாரசீக பெண்ணின் மகனான மஃமூன் பாரசீகப்பகுதியில் இருந்த மெர்வ் நகரை விரும்பி அங்கே தங்கியிருந்தார்.

மன்னர் அமீன் கொல்லப்பட்டதால் பாக்தாத் மக்கள் மிகுந்த அதிருப்தியுடன் இருந்தனர். ஆகவே பத்லுஇப்னு சஹல் மன்னரை பாக்தாத் வருவதை தாமதப்படுத்தினார்.

அமீனின் கொலையால் அதிருப்தியுடன் இருந்த மக்களை சமாதானப்படுத்தும் விதமாக ,தலைமை அமைச்சரான பத்லுஇப்னு சஹல் அவர்கள் ஏராளமான அன்பளிப்புகளை மக்களுக்கு வழங்கி கொண்டே இருந்தார்.

பத்லுஇப்னு சஹல் தனது சகோதரர் ஹஸன் இப்னு சஹல் அவர்களை கவர்னராக நியமித்தார். ஹர்ஷமா என்பவர் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கூபா,பஸரா பகுதிகளில் கலவரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து இருந்தது.

தளபதி ஹர்ஷமா அவர்கள் ,பேரரசரிடம் நாட்டின் உண்மை நிலைகளை எடுத்து சொல்ல மெர்வ் நகருக்கு செல்ல முடிவெடுத்தார்.

இதனையறிந்த அமைச்சர் பத்லுஇப்னு சஹல் பேரரசரிடம் உண்மைநிலையை சொன்னால் தனது பதவி பறிபோய்விடும் என்று அஞ்சி தளபதி ஹர்ஷமாவை பற்றி தவறான தகவல்களை பேரரசருக்கு தெரிவித்தார்.

ஆகவே தளபதி ஹர்ஷா மெர்வ் நகருக்கு சென்றதும் விசாரணை ஏதும் செய்யாமல் சிறைப் படுத்தப்பட்டார்.

நிர்வாக சீர்கேடுகளால் பாக்தாத் நகரில் பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது.

ஆகவே உயிருக்கு அஞ்சி அமைச்சர் பத்லுஇப்னு சஹல் அவர்களும், கவர்னர் ஹஸன் இப்னு சஹல் அவர்களும் பாக்தாதைவிட்டு தப்பியோடி விட்டனர்.

பாக்தாதின் அடுத்த வாரிசாக மூஸா அல் காதிமின் மகன் அலிரிதாவை மன்னர் மஃமூன் அறிவித்தார்.

அப்பாஸியர்களின் கருப்புநிறக்கொடிக்கு பதிலாக பச்சைநிறக் கொடியை மன்னர் மஃமூன் அறிவித்தார்.

என்ன காரணம்?

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!