சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்!-சபாநாயகர்..

சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது: சபாநாயகர் அப்பாவு..

சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு உரையில் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது என்று ஆளுநர் உரையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது.

வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம்: சபாநாயகர் அப்பாவு.

நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது.