கீழக்கரையில் புதியதோர் கட்டுமான நிறுவனம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பஸ்னா காம்ப்ளக்ஸில் கீழக்கரையை சேர்ந்த இளம் இன்ஜினியர்கள் முஹம்மது முகைதீன், மனாஸ், சீனி, அப்பாஸ் அலி இணைந்து ஃபார்ம் எக்ஸ்ட் கட்டிட கலை என்ற பெயரில் கன்சக்சன் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் இன்ஜினியர் கபீர், ஹமீதியா தொடக்கப் பள்ளியின் தாளாளர் சதக் இலியாஸ், மஹ்துமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் சின்னக்கடை தெரு ஹாஜா இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு