Home செய்திகள் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரைஇரயில் பெட்டிகளுடன் 100கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது

உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரைஇரயில் பெட்டிகளுடன் 100கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது

by mohan

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மதுரை போடி ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டது.மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டத்திற்காக 2008ஆம் ஆண்டு 165 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2010 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது.20க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள், 100க்கும் அதிகமான சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் பத்து ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட சோதனை ஓட்டம் உசிலம்பட்டி வரை நடைபெற்றது. குறிப்பாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளை குடைந்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்த சூழலில் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்டமாக இரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்ஜின் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை சென்றது.21 கிலோ மீட்டர் சென்றுவிட்டு மீண்டும் 90 கிலோமீட்டர் வேகத்தில் உசிலம்பட்டி திரும்பி அகல ரயில்பாதையின் உறுதி தன்மை கண்டறியப்பட்டது.இரு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்ட சூழலில் 3ம் கட்டமாக இரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளுடன் 120 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.பெங்களுர் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ரயிலில் பயணம் செய்து ரயில் பாதையின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்தார்.இவரின் ஒப்புதலுக்குப்பின் ஆண்டிபட்டி வரை ரயில் போக்குவரத்து துவங்கும் எனத் தெரிகிறது.விரைவில் போடி வரை மீதமுள்ள பணிகள் நிறைவுற்று இந்த மதுரை போடி ரயில் சேவை துவங்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட ரயில்வே பாதையில் ரயில் பெட்டிகளுடன் ஊர்ந்து சென்றது காண்போர் மனதில் பரவசத்தை ஏற்ப்படுத்தியது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com