Home செய்திகள் உவர்நீர் மீன் வளர்ப்பு திட்ட மீனவர்களுக்கு தொழில்நுட்ப கள பயிற்சி- சுற்றுலா..

உவர்நீர் மீன் வளர்ப்பு திட்ட மீனவர்களுக்கு தொழில்நுட்ப கள பயிற்சி- சுற்றுலா..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.9- சென்னை மத்திய உவர் நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு முறை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன்வளர்ப்பு தொடர்பாக மீனவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். மண்டபம் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI), முனைக்காடு , சீனியப்பா தர்ஹா வளங்குன்றா உயிரி வளர்ப்பு நிலையங்களை பார்வையிட்டனர். இவ்விடங்களில் உள்ள கூண்டு மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, கடல் மீன் அருங்காட்சியகம் பண்ணை இறால் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு தொழில்நுட்பஙகள் குறித்து மீனவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!