காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..

தென்மேற்கு வங்ககடலில் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இந்த புயல் இதுவரையில்லாத ஒரு அசாதரண நிலையில் நகர்வதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீன வர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.