பயணத்தை குளிர்விக்கும் “வெள்ளரிப்பிஞ்சு”..

நீண்ட தூரம் பயணம் என்றாலே உடல் சூடேறி வயிறு உபாதைகள் பொதுவாகவே தொற்றிக்கொள்ளும். அந்த உடல் சூட்டை போக்க விலை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்தி உடலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி கொள்பவர்கள் அதிகம்.

ஆனால் அருப்புக்கோட்டை வழியாக மதுரை விமான நிலையம் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை உணவுதான் “வெள்ளரி பிஞ்சு”. இந்த வழியில் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வண்ணம் நம் வாகனத்தை நிறுத்தினாலே அருகில் வந்து தருவார்கள்.

அடுத்த முறை மதுரை பயணம் செய்யும் பொழுது சில நொடிகள் செலவு செய்து குறைந்த விலையில் பயணக் களைப்பை ஆற்றுங்கள்..