தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களுக்கு என ஐந்து தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..

தமிழ்நாடு மீனவர் பேரவையின் பத்தாவது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் ,காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் இரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடல் மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகனார் ” கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் ஓர் இரண்டு தொகுதிகள் மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அதிலும் குறிப்பாக புதுவை மாநிலத்தில் மீனவர்களுக்கு என எந்தத் தகுதியும் ஒதுக்கப் படுவதில்லை என்றும் கூறினார் .தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் மீனவர்களுக்கு என 5 சட்டமன்ற தொகுதிகளாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார் . மீனவர்களின் பிரதிநிதிகளாக நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு தங்கள் முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர்களுக்குதான் தங்கள் வாக்கு என்றும் அவர் தெரிவித்தார்.