Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தேவர் குருபூஜை பசும்பொன்னில் கலெக்டர், எஸ்பி ஆய்வு..

தேவர் குருபூஜை பசும்பொன்னில் கலெக்டர், எஸ்பி ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.18- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்த நாள் விழா, 61 வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் பசும்பொன்னில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் அக்.30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு சார்பில் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும். பல்வேறு கட்சிகள், பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்படும். பசும்பொன்னுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாகன நிறுத்துமிடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மக்கள் செல்லும் வழி, சாலைகள் சீரமைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடைபெறும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி வழங்குவதை உறுதி செய்தல். தேவையான இடங்களில் மின் விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், குடிநீர் வசதி தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கிய பணிகளை துரிதமாக முடித்து விழா சிறப்பாக நடைபெற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், தாசில்தார் சேதுராமன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசுதேவன், பசும்பொன் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!