Home செய்திகள் ராமேஸ்வரம் கோவை வாராந்திர ரயில் மின் வழித்தடத்தில்  இயக்கம்..

ராமேஸ்வரம் கோவை வாராந்திர ரயில் மின் வழித்தடத்தில்  இயக்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.18 – கோவை – ராமேஸ்வரம் (வ. எண்: 16618) , ராமேஸ்வரம்-கோவை (வ.எண் 16617) வாராந்திர விரைவு ரயில் ஈரோடு, கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி வழி என இரு மார்க்கங்களில் இருந்து இயக்கப்பட்டுகிறது. பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், கோவை-ராமேஸ்வரம்-கோவை வாராந்திர விரைவு ரயில் ராமநாதபுரத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகிறது. இவ்விரு மார்க்கங்களில் இருந்து புறப்படும் இந்த ரயிலில் மின் இன்ஜின் பொருத்தப்படுகிறது. மின் இன்ஜின் பொருத்தப்பட்டு கோவையில் இருந்து நேற்றிரவு (அக்.17) புறப்பட்ட இந்த ரயில் (வ.எண்: 16618) இன்று (அக்.18) அதிகாலை 4:30 மணியளவில் ராமநாதபுரம் வந்தடைந்தது. இந்த ரயில் இன்று (அக்.18) இரவு 8:13 மணிக்கு ,  ராமநாதபுரத்தில் இருந்து மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு கிளம்பும் முதல் ரயில் (ராமேஸ்வரம் கோவை) என பெருமை பெற உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com