Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விருதுநகர் மாவட்டத்தில் கண்மாயில் சாம்பல் கழிவு கொட்டும் அவலம்..

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாயில் சாம்பல் கழிவு கொட்டும் அவலம்..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் இயங்கி வரும் ரைஸ் மில்லின் சாம்பல் கழிவுகள் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டி வருவதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்படுவதாக புகார் .மேலும் இதனால் பெண் ஒருவர் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ரைஸ்மில் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளிமாவட்ட, வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல் – லினை அரிசியாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நெல் அவிக்கும் போது விறகுகளை பயன்படுத்தாமல் நெல் பதர்னைப் பயன்படுத்துவதால் அதில் இருந்து சாம்பல் கழிவுகள் அதிகம் உருவாகிறது.

இதனை முறையாக அகற்றாமல் அருகிலுள்ள இளந்திரை கொண்டான் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டி வருகின்றனர். இதனால் காற்று வீசும் போது அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவுவதும், இவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தீக்காயமடைவதும், கண்களில் தூசு பட்டு குருடும் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சுற்றியுள்ள கிராமபகுதியில் நிலத்தடி நீர் மட்டம், மற்றும் விவசாயமும் பாதிப்பதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவ்வழியாக விறகு எடுக்க சென்ற அம்மையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த காமக்காள் (வயது 47) என்ற பெண் நிலை தடுமாறி தவறி சாம்பல் மீது விழுந்ததில், கால்கள் இரண்டும் வெந்து தீக்காயம் ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டவிராதமாக சாம்பல் கொட்டிய ரைஸ் மில் மீது மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!