கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் சார்பாக 11.03.2019 அன்று உயிரியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “உயிரியல் துறையில் முக்கிய அங்கமாக உள்ள நுண்ணுயிரியல்ää உயர் தொழிற்நுட்பவியல்ää விலங்கியல்ää தாவரவியல்ää மீன்வளர்ப்பு போன்ற துறைகள் இந்திய அளவில் சிறந்த வளர்ச்சியடைந்த துறைகளாக உருவெடுத்து வருகிறது. உயிரியல் துறை சார்ந்த மேற்படிப்பு முடித்த மாணவ மாணவியர் வேலை வாய்ப்பை எளிதாக பெறுபவர்களாகவும் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் உயிரியல் துறையின் முக்கிய அங்கமாக உள்ள நுண்ணியிரியல் துறை சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றவர்கள் மிக எளிதாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்” என்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹைதராபாத் பல்கலைக்கழக உயிரியல் தொழில் நுட்பவியல் பேராசிரியர் மதுபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் “உயிரியல் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்காக யு.ஜி.சி.ää ஐ.சி.எம்.ஆர்.ää சி.எஸ.ஐ.ஆர்.இ போன்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் எண்ணற்ற உதவித்தொகையை வழங்குகிறது. அதனை பெறுவதற்காகää மாணவ மாணவியர் தாங்கள் சார்ந்த துறைகளின் திறமையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும், உயிரியல் துறையின் மூலமாக உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் எளிதாக வேலை வாய்ப்பை பெறும் யுக்தி குறித்தும் மாணவ, மாணவியரிடையே எடுத்துக் கூறினார்.
முன்னதாக நுண்ணுயிரியல் துறைத்தலைவர் .ஆனந்த் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் திரு.பு.முகம்மது இப்ராஹிம் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிரியல் துறை மாணவ மாணவியர் 120பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவியரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் . சுதர்சன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் .முகம்மது யூசுப் செயலர் சர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.