கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம்..:

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழக்கரை முக்குரோட்டு பகுதியில் பிரச்சாரம் செய்தார். உடன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்.பி. அன்வர் ராஜா, பாஜக மாநில து.தலைவர் குப்புராமு, கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், பொருளாளர் ஹரி நாராயணன், பேரவை செயலாளர் வி.வி.சரவணபாலாஜி, துணைச்செயலாளர் குமரன்,மீனவரணி செயலாளர் முனியசாமி,முன்னாள் நகர் செயலாளர் இம்பால உசேன்,முன்னாள் து.சேர்மன் ஹாஜாமுகைதீன், இம்பாலா சுல்தான், 1வது வார்டு செயலாளர்  செல்வகணேஷ பிரபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டர்.

மேலும் கூட்டணி கட்சியினர் தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.