சமூக வலை தளங்களில் விஷம பிரச்சாரத்தை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் திமுக புகார்…

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி தேர்தலில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் விஷம் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ. வீரராகவ ராவிடம், திமுக தொகுதி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம் மனு அளித்தார்.

திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் (ஓய்வு) குணசேகரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பிரவீன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.