ஆதனூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறுமா ?..

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா ஆதனூர் கிராமத்தில்  உள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறுமா என ஊர்பொது மக்கள் சார்பாக ஏர் உழவன் பொது நலக் குழுவினர் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வரக்கூடிய குடிதண்ணீர் ஆதனூர் மற்றும் மிளகுநத்தம் கிராமத்திற்கு சரிவர கிடைப்பதில்லை, ஆகையால்   குடிநீருக்காக, ஆண்டுதோரும் பக்கத்து கிராமமான காட்டுநாயக்கன்பட்டி, எப்போதும்வென்றான் என கிட்டத்தட்ட  5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரக் கூடிய  ஆவலநிலை உள்ளது. ஆதனூர் மற்றும் மிளகுநத்தம் கிராம மக்களின் அவலநிலையை நீக்க ஜெகவீரபாண்டியபுரத்தில் உள்ள Pumping Houseல் இருந்து நேரடியாக ஆதனூருக்கு வண்டிப்பாதை வழியே தனியாக ஒரு லயன் போட்டு மேல்நிலை தொட்டியோ அல்லது Pumping House அமைத்து அதன் மூலம் குடிநீர் வசதி செய்து ஆதனூர் மற்றும் மிளகுநத்தம் மக்களின் குடிநீர் பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் ஊரில் உள்ள மேல் நிலைத் தொட்டி பழுதடைந்துள்ள நிலையில் அதனை மாற்றி அமைக்க வேண்டி ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனு கொடுத்தோம். அந்த மனு மீதான நடவடிக்கையாக இருந்த பைப் லையனை  அகற்றி விட்டார்கள். இந்த நாள் வரையில் மேல்நிலைத்தொட்டி அமைக்கவும் இல்லை,தண்ணீரும் இல்லை. இருக்கக்கூடிய  ஒரே ஒரு சின்டெக்ஸ் டேங் ல் இருந்து தண்ணீர் எடுப்பதால், பெண்களின் கூட்டம் காரணமாக  தண்ணீருக்காக நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொட‌ர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் கிராமத்தில  உள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு,தண்ணீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட  வசதி,கொண்ட புதிய அங்கன் வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபாய நிலையிலுள்ள மின் கம்பங்கள் சரி செய்ய வேண்டி மின்வாரித்துக்கு பல முறை மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்  எடுக்க வில்லை கேட்டால் புது மின்கம்பங்கள் இல்லை வரும்போது நட்டுவோம் என்கிறார்கள் புதிய மின் கம்பம் வரும் வரை அபாயமான மின் கம்பம் எத்தனை உயிர்களை பழிவாங்குமோ தெரியவில்லை. உடனடியாக புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் எங்கள் கிராம மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டி நாங்களே முன்வந்து எங்கள் ஊரிலுள்ள ஊரணிகளை குடிமறாமரத்து திட்டத்தின் மூலமாக அரசின் எந்தவித உதவியும் இல்லாமல் தூர்வாரி ஊரணிகள் அனைத்தையுமே ஆழப்படுத்தி உள்ளோம். எங்களுடைய நீண்டகால முயற்சியாக எப்போதும் வென்றான் அணைக்கட்டில் இருந்து உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை ஆதனூர் ஆற்றில் நடுவே தடுப்பணை கட்டி குழாய் மூலமாக ஊரணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான  பணிகளை அரசாங்கம் செய்ய தவறும் பட்சத்தில் நாங்களே மக்கள் பங்கீடாக பணம் சேர்த்து, அந்த பணியை செய்ய தயராக உள்ளோம். அவ்வாறாக பணியை தடையின்றி செய்ய  தேவையான  ஆணையை  வழங்க வேண்டும் என ஆதனூரை சார்ந்த  ஏர் உழவன் பொது நலக் குழுவினர் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.