Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வளமான தமிழகம் அமைய அதிமுக.,கூட்டணியை வெற்றியடைய செய்யுங்கள்….முதல்வர் எடப்பாடி பழனிசாமி இராமநாதபுரத்தில் பேச்சு..

வளமான தமிழகம் அமைய அதிமுக.,கூட்டணியை வெற்றியடைய செய்யுங்கள்….முதல்வர் எடப்பாடி பழனிசாமி இராமநாதபுரத்தில் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும். ஒருமித்த கருத்துடைய பாஜ., அதிமுக கூட்டணி மெகா கூட்டணி. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அதிக கரித்துள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் ஊரணிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக., நிறைவேற்றாது. முதல்வர் தெருவில் நின்று பேசுவதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக., பாஜக, கூட்டணி வலுவான கூட்டணி . மக்கள் செல்வாக்கு மிக்க கூட்டணி . கல்வி மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளோம். திமுக., ஆட்சியில் நிலவிய மின் வெட்டு, 2011ல் முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக., ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பிடம் பிடித்துள்ளது . தமிழக நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். தமிழகத்தில் நிலையான ஆட்சி தொடரவும், வளமான தமிழகம் அமைய அதிமுக., பாஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி ராமேஸ்வரத்தில் நிறுவப்பட உள்ளது. கீழக்கரை ரயில்வேட்டில் மேம்பாலம், ரூ.34 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர் மணிகண்டன் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக மக்கள் எழுச்சி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சாயல்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,தமிழகத்தில் படித்த 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி வருகிறோம். தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருபவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.நான் முதல்வர் ஆனதில் இருந்து எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் தொல்லை கொடுக்கிறார். அவர் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என நினைக்கிறார். மக்கள் ஆதரவு அதிமுக வுக்கு இருக்கும் வரை ஸ்டாலின் முதல் வராக ஆகமுடியாது இவ்வாறு அவர் பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!