Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல்முறையாக திருநங்கை – பிரத்யேக பேட்டி-வீடியோ..

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல்முறையாக திருநங்கை – பிரத்யேக பேட்டி-வீடியோ..

by ஆசிரியர்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல்முறையாக திருநங்கை திரு பாரதி கண்ணம்மா அவர்கள் போட்டியிடுவதாக நமது கிழை நியூஸுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அவர் கூறும்போது, நான் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தேன், அப்பொழுது திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அறிவித்த காரணத்தினாலும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து போட்டியில் இருந்து விலகி விட்டேன். காரணம் திருப்பரங்குன்றத்தில் சட்டமன்றத் தொகுதியில்  அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் ஜெயித்து வெற்றி பெற்றால் செய்வேன்.

மேலும் அந்தப்பகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நெசவு பூங்கா ஒன்றை அமைக்கவும்,  திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மிக முக்கியமாக   திருப்பரங்குன்றம் தங்கத்தேர் இதுவரையில் வெளியே வரவில்லை அது குறித்து உரிய விசாரணை நடத்தி அதற்கான தீர்வு காண வேண்டும் எனவும் உறுதிபட கூறினார்.

மேலும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக ஒரு திருநங்கை வருகின்ற 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக ஆர்வத்துடன்  தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!