Home செய்திகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்திய (PFI) சார்பில் 40 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்திய (PFI) சார்பில் 40 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…

by ஆசிரியர்

திபாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் கிரீன் டீ ஹோட்டலில் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர்களுக்கு உதவியாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமாகவும் அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் மதிப்பில் துவங்கப்பட்ட உதவி தொகையானது 2014 -15 ஆம் கல்வி ஆண்டில் ரூ.15 லட்சமாகவும், 2015- 16 கல்வி ஆண்டில் ரூ.17 லட்சமாகவும், 2016 -17 கல்வி ஆண்டில் ரூ.17 லட்சமாகவும் உயர்த்தி கொடுக்கப்பட்டது .கடந்த 2016- 17 கல்வி ஆண்டில் மட்டும் 262 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த 2017- 18 ஆம் கல்வி ஆண்டில் ரூ.19 லட்சம் என உயர்த்தப்பட்டு / தமிழகம் முழுவதும் தற்போது 263 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு இதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் பல இடங்களில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ராமநாதபுரம் க்ரீன் ட்ரீ ஓட்டல் மினி ஹாலில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் எம். நியாஸ் கான் தலைமையில் நடைபெற்றது. சமூக மேம்பாட்டு துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜுபைர் ஆபிதீன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பஷீர் அலி, இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை தலைமை டாக்டர் பரணிகுமார் , எஸ். எஸ் .கே .குழும நிறுவனர் சலிமுல்லாஹ்கான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அப்துல்லாஹ் (ஆக்ஸஸ் இந்தியா) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர். பாப்புலர் பிரன்ட் ஆப் சமூக மேம்பாட்டுத் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.முகமது இப்ராஹீம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், ராமநாதபுரம் நகர் செயலாளர் ஐ. ஹைதர் அலி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ரூ 2.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை 40 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!