ஐந்தாம் ஆண்டு விளையாட்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இசிஆ., கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் மாதவனூர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வி.கண்ணன், சிறப்பு அழைப்பாளராக இந்திய கபடி அணி முன்னாள் தலைவர் மற்றும் பயிற்சியாளரும், தமிழ் தலைவாஸ் அமைப்பு செயல் இயக்குநருமான கே.பாஸ்கரன் ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர். தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, இயக்குநர் முனியசாமி, நிர்வாக இயக்குநர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்