இராமநாதபுரத்தில் திமுக சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியான திமுக சார்பாக மாநிலம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (05-02-2018) நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியான இராமநாதபுரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சி தொண்டர்கள் உட்பட தோழமை கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் இன்னும் பல தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர். இ க்கூட்டத்தில் திமுக தலைவர்கள் உட்டபட அனைத்து தோழமை கட்சிகளும் கண்டன உரையாற்றினர்.