சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

கடந்த வாரம் அல் பையினா பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் கீழக்கரை வடக்குத் தெருவைச சார்ந்த 5 வந்து நிரம்பிய முஹம்மது இசாக், “WILL MEDALS KIDS RECORD” எனும் நிறுவனத்திடம் இருந்து சிறு வயதிலேயே அதிகமான சிற்பி வகைகள் சேர்த்தமைக்காக விருது பெற்றார்.

இச்சிறுவனை ஊக்கப்படுத்தி, பாராட்டும் வகையில் இராமநாதபுரம் ஆட்சியாளர் நடராசன், இன்று (05-02-2018)  அவருடைய அலுவலத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்து, பரிசுகளும் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது அச்சிறுவனின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.