இராமநாதபுரத்தில் தி.மு.க சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்..

இராமநாதபுரம் அரன்மனை முன்பு 28-07-2017 அன்று நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் தமுமுக மமக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைமை குழு உறுப்பினர் சு.ப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் சத்தியமுர்த்தி, கிழக்கு தமுமுக மமக பெறுப்புக்குழு தலைவர் பனைக்குளம் பரகத்துல்லாஹ், இந்திய யூனியான் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், திமுக மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகர், மேற்கு மமக மாவட்ட செயலாளர் இக்பால், கிழக்கு பெறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கச்சிமடம் ஆசிக், மேலப்புதுக்குடி ரைஸ், மேற்கு மமக மாவட்ட து.செயலாளர் வாவா ராவுத்தர், விசிக மண்டல பெறுப்பாளர் யாசின், இந்திய கம்யூணிஸ்ட வக்கீல் முருகபதி, நகர் தலைவர்(தமுமுக மமக) பரகத்துல்லாஹ், நகர் செயலாளர்(மமக) மன்சூர் உட்பட திமுக, தமுமுக, மமக, இந்தியா கம்யூணிஸ்ட்(மாரக்கிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள், இ.யூ.முஸ்லிம் லீக், ப்ஃர்வ்ட் பிளாக் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வாலர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.