கீழக்கரையில் மழை வேண்டி நாளை (30-07-2017) சிறப்பு தொழுகை..

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நாளை ( 30.07.2017 ) மஹ்துமியா பள்ளி வளாகத்தில் காலை 08.00 மணிக்கு நடைபெற உள்ளது.

நேற்று கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பில் இருந்து வந்த பரிந்துரை கடிதத்தின் பேரில்,கீழக்கரையில் ஜும்மா நடந்த அனைத்து பள்ளிகளிலும் ஜும்மா தொழுகை முடிந்ததும் இந்த சிறப்புத் தொழுகையை பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது. தொழுகைபள்ளியின் வெளி வாசலிலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.நகர் முழுதும் இன்று காலை 09.00 மணியிலிருந்து இரவு 08.00 மணி வரை ஆட்டோவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இத்தொழுகையை ஊரின் நலன் மேம்பட பொதுமக்கள் தண்ணீருக்காக படும் சிரமங்கள் குறைய நாளை ஒருநாள் சிரமம் பாராமல் வேறுபாடுகளையும், தூரங்களையும், கணக்கில் கொள்ளாமல், இந்த சிறப்புத் தொழுகையில் கலந்து கொள்ளவும், பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மழை வர வேண்டி குடும்பத்தாருடன் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் இருக்கும் அன்பர்களும் இத் தொழுகையின் மகத்துவம் அறிந்து, இறையருள் கிடைக்க வழிசெய்ய வேண்டுமாய் அனைத்து  ஜமாத்தார்கள் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.