சக்கரவா நல்லூர் கருப்பசாமி ஆலய ஆடி திருவிழா..

இராமநாதபுரம் மாவட்டம் சக்கரவாள நல்லூர் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஐய்யா கருப்பசாமி ஆலய ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழா இன்று (11/08/20/8) காலை 8 மணிக்கு கருப்பசாமிக்கு கிடாய் வெட்டி, பின்னர் யாக பூஜை நடைபெற்றன.

உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், குழந்தை பாக்கியத்திற்கு, திருமண தடை நீங்கவும், கல்வி தொழில் அபிவிருத்திக்காகவும், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் 11 வருடமாக குறி சொல்லும் ஆலய  பொறுப்பாளர் சிறப்பு தீபாராதனைக்கு பின் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறினார்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தேவிபட்டினம் ஜெயராமன், ராமநாதபுரம் ரவிச்சந்திரன் பாண்டி சந்திரன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.