Home செய்திகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாதுகாப்பாக மீட்க பல்வேறு நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு..

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாதுகாப்பாக மீட்க பல்வேறு நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.8.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு நாட்டுப்படகு மீனவர் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, இலங்கை கடற்படையினரால் 09.08.2018 அன்று சிறைபிடிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் மற்றும் வல்லங்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

 

கடந்த 9.8.2018 அன்றுää புதுக்கோட்டை மாவட்டம்ää ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்படிப்பதற்காக 3 வல்லங்களில் கடலுக்குள் சென்ற இராமநாதபுரம்ää புதுக்கோட்டை, நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 27 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.  இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் மற்றும் வல்லங்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையினை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்ää மேற்குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கு விரிவான அறிக்கை சமிர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளிடத்தில் விளக்கினார்.

இந்த நிகழ்வின்போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் டோனிஜான் வர்கீஸ்ää, துணை இயக்குநர் காத்தவராயன் உட்பட மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!