Home செய்திகள் விஜயகாந்த் நினைவிடத்தை காண வருவோருக்கு சமபந்தி விருந்து!-இறந்தும் பசியாற்றும் கேப்டன் என தொண்டர்கள் நெகிழ்ச்சி..

விஜயகாந்த் நினைவிடத்தை காண வருவோருக்கு சமபந்தி விருந்து!-இறந்தும் பசியாற்றும் கேப்டன் என தொண்டர்கள் நெகிழ்ச்சி..

by Askar

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமையகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு மணி மண்டம் கட்ட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைந்து 67 நாட்களாகியும், அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் நினைவிடத்தை காண மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.அந்த வகையில் இன்று (மார்ச்-03) 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சமபந்தி விருந்து (பிரியாணி) அளிக்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக தலைவாழை இலையில் காலை இட்லி வடை, பொங்கல் சட்னி, கேசரி, நண்பகல் சைவம் மற்றும் அசைவ உணவுகள், மாலை வெண்பொங்கல், கிச்சடி, சர்க்கரை பொங்கல் என மூன்று வேளையும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் நினைவிடத்தை காண வரும் அனைவருக்கும் டேபிள் மற்றும் சேர் போட்டுக் சமபந்தி விருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com