வெடித்து சிதறிய செல்போன்; அலறி அடித்து ஓடிய கடைக்காரர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..
பழனியில் செல்போன் கடையில் வாடிக்கையாளரின் செல்போனை பழுதுநீக்கம் செய்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறிய சி.சி.டிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாராபுரம் சாலையில் சபரி கிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் ரெட்மி நோட் 8 ப்ரோ மாடல் செல்போன் ஒன்றை சர்வீஸ் செய்வதற்கு கொண்டு வந்தார். அப்போது செல்போனை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியதால் அலறி அடித்து கொண்டு சபரிகிரி செல்போனை கடையை விட்டு வெளியே சென்று விட்டார். மேலும் செல்போனிலிருந்து திடீரென கரும்புகை கடை முழுவதும் கிளம்பியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.மேலும் அவர் கடையில் பொறுத்திருந்த சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.