தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினத்தையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அண்ணாபுகழ் ஓங்குக!, அண்ணாவழியில் அயராது உழைப்போம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநில சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி, கலைஞர் புகழ் ஓங்குக! அண்ணாபுகழ் ஓங்குக! என முழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம் ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், திவான் ஒலி, நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், மாவட்ட பிரதிநிதி சீ. பொன்செல்வன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்க ராஜ்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி (எ) சங்கர், ராஜராஜன், செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது, மாவட்ட துணை செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி. அருள், நிர்வாகிகள் ராமராஜ், சுதன்ராஜா, யோவான், கருப்பணன், கஜேந்திரன், பாலா மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.