வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேருடன் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் பள்ளி விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கார் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஒட்டிசென்ற 12ஆம் வகுப்பு மாணவன் அதனான்(19) சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ராஷித்(16), ஈஹான்(16), தக்வீம்(16), தல்ஹா(16) ஆகிய 4 மாணவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலிசார் விபத்தில் பலியான மாணவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.