ஒட்டன் சத்திரம் ,பழனி சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 1000 கோடியில் தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 12 ஊராட்சிகளில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய ரேஷன் கடை திறப்பு விழா உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரூபாய் 17.56 கோடி அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று மொல்லம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் சிமெண்ட் காங்கிரட் தடுப்பணை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மானூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் பள்ளி சுற்று சுவர் அமைத்தல் தாழையூத்து ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நியாய விலை கட்டிடம் திறப்பு மற்றும் தானியங்கி கிடங்கு கட்டுதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயணியர் நிழல் கூரை திறப்பு விழா என பல்வேறு 12 ஊராட்சிகளில் 18 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பழனி கோட்டாட்சியர் சரவணன் வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.