தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி; நகர்மன்ற தலைவர் சாதிர் பங்கேற்பு..

தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மற்றும் துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா ஆகியோருடன் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் தலைமையில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் பூங்காவின் தூய்மையை பாதுகாக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தென்காசி யானைப்பாலம் படித்துறையை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், மகேஸ்வரன், மாதவ ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் முத்து மாரியப்பன், பொருளாளர் ஷேக் பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், மாணவரணி மைதீன், டாக்டர் பிஸ்வாஸ், சாமுவேல் கனகராஜ், மாவீரன் ஷேக், பசுமை தென்காசி முஸ்தபா, குடியிருப்போர் நலசங்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோருடன் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் தூய்மை பணியாளர்கள், டிபிசி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்