ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற புதிய ‘டிஜிட்டல் வகுப்பறை’ திறப்புவிழா

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 புதிய டிஜிட்டல் வகுப்பறை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. M.K.M.செய்யது மீரா பீவி அறக்கட்டளை செலவில் புதிய டிஜிட்டல் வகுப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் கட்டப்பட்டிருந்த புதிய டிஜிட்டல் வகுப்பறையை கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் திறந்து வைத்தார். முன்னதாக சம்சுதீன் ஆலீம் கிராஅத் ஓதினார்.

திருப்புல்லாணி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் உஷா ராணி சிறப்புரை வழங்கினார். டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வசதிகளை ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் சிறப்பாக செய்திருந்தார். நன்றியுரையை இடைநிலை ஆசிரியர் இப்ராஹீம்சா வழங்கினார். நிகழ்ச்சிகளை பள்ளியின் ஆசிரியை சந்திரலீலா தொகுத்து வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் முஹம்மது மீரா, ஜைராதுல் ஜலாலியா தொடக்க பள்ளியின் முன்னாள் தாளாளர் செய்யது இப்ராஹீம், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.