கோவை கல்லூரி மாணவர் தனுஷ்கோடி கடலில் பலி…

கோயம்புத்தூர் பன்னீர்செல்வம் மகன் அபர்னேஷ்,22. திண்டுக்கல் காந்தி கிராமம் கல்லூரி எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி 2ஆம் ஆண்டு மாணவர்  இதே கல்லூரி எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி முதலாம் ஆண்டு மாணவர் வீரமணி, நண்பர்களான இருவரும் ராமேஸ்வரத்திற்கு இன்று காலை சுற்றுலா வந்தனர். தனுஷ்கோடி சென்ற அவர்கள் அரிச்சல் முனை கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கிய அபர்னேஷ் மூச்சு திணறி இறந்தார் .

மீனவர்களின் உதவியோடு அவரது உடலை போலீசார் மீட்டனர். உடல் கூறு சோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். இது குறித்து மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion