இன்று பல இடங்களில் நடைபெறும் குற்றங்களை எளிதில் அடையாளம் காணவும், குற்றங்களை தடுக்கவும் சிசிடிவி கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு கேமராக்களை வியாபார வணிக தளங்களில் பொறுத்தவும் காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழக அரசும் பிரபல சினிமா நடிகரை வைத்து சிசிடிவி கேமராவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு குறு ஒளி ஒலி காட்சியும் வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
இதற்கு வலு சோ்க்கும் விதமாக கீழக்கரை மக்கள் டீம் அமைப்பு கீழக்கரையில் உள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் சங்கம், மேலத் தெரு உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லீம் சங்கம் மற்றும் அகமது தெரு சங்கத்துக்கு தெருக்களில் சிசிடிவி பொறுத்த வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மக்கள் டீம் அமைப்பு ஒருங்கிணைப்பில் கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து “இது நம்ம தெருங்க” என்ற திட்டத்துடன் தெருக்களில் சுகாதாரத்தை பேணுவது குறிப்பிடதக்கதாகும்.
You must be logged in to post a comment.