இராமநாதபுரம் அருகே ஒரு வாரமாக மின்தடை…

இராமநாதபுரம் மாவட்டத்தில் 05.10.18 . முதல் மழை பெய்து வருகிறது. இதனால் போகலூர் ஒன்றியம் மென்னந்தி, செவ்வூர் கிராமத்தில் பெய்த மழை காரணமாக வலுவிழந்த மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால் கடந்த ஒரு வாரமாக நிலவும் மின் தடையால் இரண்டு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மென்னந்தி, செவ்வூர் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட இவ்விரண்டு கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மின்கம்பங்களை செப்பனிட்டு மின் தடையை போக்க விட்டால் விரைவில் சாலை மறியல் செய்ய போவதாக கூறினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.