நிலக்கோட்டை அருகே குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பழி..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தை சார்ந்த அம்மாவாசை மகன் கருப்பையா வயது (23) கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவர் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்புகையில் தன் நண்பர்களுடன் அதே ஊரின் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார் கிணற்றில் குதித்த அவர் திரும்ப மேலே வராததால் நண்பர்கள் அனைவரும் உடனடியாக தேடிப்பார்த்தும் கிடைக்காததால் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீவிர தேடுதலில் இறங்கி சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நிலக்கோட்டை – ராஜா