54
தூத்துக்குடி திருச்செந்தூரில் இரண்டு ஆண்டுகள் போலீசாரிடம் சிக்காமல் கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செந்தூர்- நெல்லை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளான்.
அவனை துரத்திப் பிடித்து விசாரணை செய்ததில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவனை கைது செய்துள்ள போலீசார் 28 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர்…
You must be logged in to post a comment.