தஞ்சையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம்..

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரது மனைவி, அமுதா. 56 வயதான இவர், கடந்த 11ம் தேதி ஒரத்தநாடு அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சுய நினைவு இல்லாத நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பிறகு, சுய நினைவு திரும்பாத நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

இதனை அடுத்து அழுதாவின் உடல்உறுப்புகளை தானம் கொடுக்க உறவினர்கள் முன் வந்தனர். இதனை தொடர்ந்து, அவருடைய இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் (2), கண்கள் (2) மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள், திருச்சி, சென்னை மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு, சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டன.

செய்தி:- ஜெ.அஸ்கர்