Home செய்திகள் இலங்கை அரசு விடுதலை செய்த மண்டபம் மீனவருக்கு பாஜக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்..

இலங்கை அரசு விடுதலை செய்த மண்டபம் மீனவருக்கு பாஜக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்..

by ஆசிரியர்
இராமநாதபுரம், ஆக.20 –

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி தளத்தில் ஜூலை 24 காலை தொழிலுக்குச் சென்ற விசைப்படகுகள் அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து விட்டு மறுநாள் அதிகாலை கரை திரும்பின. அப்போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் உச்சிப்புளி அருகே வட்டான்வலசை நாகநாதன், மண்டபம் அருகே சுந்தரமுடையான் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு வேலு ஆகியோரது படகுகளில் சென்ற சுரேஷ், ஆறுமுகம், மணிகண்டன், குமார், ஜெயசீலன், நல்லதம்பி, வேல் முருகன், முத்திருளாண்டி ஆகியோரை 2 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். மீனவர் 9 பேரை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு ஆக.10ல் விசாரணைக்கு வந்த  மீனவர் 9 பேரையும் நிபந்தனை படி, விடுதலை செய்து, படகுகள் மீதான விசாரணையை செப். 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைய தினம் 2 படகுகளின் உரிமைகள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி கஜநீதி பாலன் உத்தரவிட்டார்.

சொந்த ஊர் திரும்பிய  மீனவர் 9 பேரையும் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், மாநில மீனவரணி செயலாளர் நம்புராஜன், மாவட்ட பொதுச்செயலர்கள் பவர் நாகேந்திரன், மணிமாறன், மண்டபம் கிழக்கு மண்டல தலைவர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!