Home செய்திகள் நிறுவன வெற்றிக்கு நிர்வாகத்திறன் மேலாண்மை முக்கியம்:  கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் பேச்சு..

நிறுவன வெற்றிக்கு நிர்வாகத்திறன் மேலாண்மை முக்கியம்:  கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.20- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி மேலாண் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நிர்வாகத்திறன் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். இராமநாதபுரம் முஹமது சதக் ஹாமிது மகளிர் கல்லூரி முதல்வர் மீரா பேசுகையில், எந்தவொரு நிறுவனத்திற்கும் அதன் இலக்குகளை அடைய மேலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். ஒரு நிறுவன வெற்றிக்கு அதன் மேலாளர் எவ்வளவு சிறப்பாக கையாளுகிறார் என்பதை பொறுத்தது. திறமையான மேலாண்மையாளராக இருக்க, உங்கள் பணியாளர்களை நிர்வகிப்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிறுவனத்தில் அனைத்தும் சீராக இயங்குவதை உறுதி செய்வது மேலாளரின் பங்கு. 

எந்தவொரு நிறுவனம் வெற்றிக்கும் நிர்வாகத்திறன் மேலாண்மை மிக முக்கியம். இவ்வாறு அவர் பேசினார். மேலாண் துறை தலைவர் அஜ்மல் கான் வாழ்த்துரை வழங்கினர். மேலாண் துறையின் இலட்சினையை சமீரா வெளியிட ராஜசேகர், மாணவப் பிரதிநிதிகள் முஹமது ரீசல், முஹமது அல்பான், பாலாஜி, முஹமது இப்ராஹிம் பெற்றுக் கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!