மதுரையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனோ.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடகத்துறையினருக்கும் சோதனை…

மதுரையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  சில தினங்களுக்கு முன்பு மதுரை பிரபல தொலைக்காட்சி நிருபர்,  செய்தித்தாள் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில் இன்று (28/06/2020) மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தொலைகாட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் பொதுச் செயலாளர் காசிலிங்கம்,  தலைவர் ஜெகநாதன் பொருளாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள காட்சி ஊடகம்,  அச்சு ஊடகத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..